Home Common Health Problems ஹெர்னியா

    ஹெர்னியா

    678
    0
    SHARE

    யிற்றை மூடியிருக்கும் தசைகளில் ஏற்படும் ஒரு கிழிசலே குடல் பிதுக்கம் அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிழிசல் வழியாகக் குடலின் ஒரு பகுதி வெளியே வந்து தோலுக்கு அடியில் புடைப்பை ஏற்படுத்துகிறது. குடல்பிதுக்கம் பெரும்பாலும் கனமானவற்றைத் தூக்குவதால் அல்லது உடலைக் கடினமாக வருத்திக் கொள்வதால் ஏற்படுகிறது உதாரணமாக பிரசவத்தின் போது), சில குழந்தைகள் குடைப்பிதுக்கத்துடனேயே பிறக்கின்றன. ஆண்களுக்குப் பொதுவாக குடலிறக்கம் அரையில் ஏற்படுகிறது. வீங்கிய நிணநீர் முடிச்சுகளாலும் அரையில் புடைப்புண் ஏற்படுகின்றன.

    குடல்பிதுக்கத்தைத் தடுக்க கனமான பொருள்களைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

    குடல்பிதுக்கத்துடன் வாழ்வது எப்படி?

    கனமான பொருள்களைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்

    குடல்பிதுக்கத்தைத் தாங்குவதற்கான மருத்துவ கருவிகளை பயன்படுத்தி கொள்வது நல்லது

    அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்து கொள்ள வேண்டும்

    தன்கவனிப்பு
    குடல்பிதுக்கம் திடீரெனப் பெரிதானால் அல்லது வால் எடுத்தால் தலையை விட உயரமாகக் காலைத் தூக்கிவைத்துப் படுத்துக்கொண்டு பிதுங்கிய குடலை மெதுவாக அழுத்தி உள்ளே போகச் செய்ய வேண்டும்
    அப்படி போகாவிட்டால் மருத்துவ உதவியை நாடுவது நல்லது

    குடல் பிதுக்கத்தால் ஒருவருக்கு வலி அதிகமாகி, வாந்தி ஏற்பட்டு மலம் கழிக்க முடியாமல் போனால் அது ஆபத்தாகக்கூடும். அறுவை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here